/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/209_1.jpg)
யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இப்படம் தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் உருவாகிவருகிறது.
ஹைதராபாத், இத்தாலி எனப் பல்வேறு இடங்களில் முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட்டது. தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறையத் தொடங்கிவிட்டதால் ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல படங்களின் படப்பிடிப்பு தொடங்கிவிட்ட நிலையில், தற்போது ராதே ஷ்யாம் படக்குழு படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளது. ஒரே கட்டத்தில் படப்பிடிப்பு நடத்தி எஞ்சியுள்ள காட்சிகளைப் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)