/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/201_13.jpg)
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த மார்ச் மாதம் திரையில் வெளியான படம் 'ராதே ஷ்யாம்'. இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்திருந்தது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கியிருந்தார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெளிவந்திருக்கும் இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக முதல் நாளிலேயே 79 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இந்நிலையில் 'ராதே ஷ்யாம்' படம் ஏப்ரல்-1 அன்று ஓடிடியில் வெளியாகும் என அமேசான் ப்ரைம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏப்ரல்-1 அன்று தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளிலும் வெளியாகிறது. இதை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து ஒரு புதிய ட்ரைலரையும் அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது.
Hop on this magical journey of love with #RadheShyamOnPrime, April 1
#Prabhas @hegdepooja @director_radhaa @UVKrishnamRaju #Vamshi #Pramod @PraseedhaU @UV_Creations @GopiKrishnaMvs @TSeries pic.twitter.com/D7ZcDFfS7y
Follow Us