Advertisment

பட வியாபாரத்தில் புதிய சாதனை படைத்த பிரபாஸ்!

prabhas

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இப்படம் தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது.

Advertisment

ஹைதராபாத், இத்தாலி எனப் பல்வேறு இடங்களில் முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட்டது. தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறையத் தொடங்கிவிட்டதால் ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பை முழுவீச்சில் நடத்திவருகிறது.

Advertisment

இந்த நிலையில், ராதே ஷ்யாம் படத்தின் வியாபாரம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராதே ஷ்யாம் படத்தின் இந்தி ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதர மொழிகளுக்கான ஓடிடி உரிமைகளை ஜீ 5 கைப்பற்றியுள்ளது. மேலும், அனைத்து மொழிகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையையும் ஜீ நிறுவனமே பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விற்பனை மூலம் தன்னுடைய சினிமா வரலாற்றில் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனையில் நடிகர் பிரபாஸ் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

prabhas radhe shyam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe