radhe shyam

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது.

Advertisment

ஹைதராபாத், இத்தாலி எனப் பல்வேறு இடங்களில் முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட்டது. கரோனா பரவலின் தாக்கம் குறைந்து இயல்புநிலை திரும்பத் தொடங்கியவுடன் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்துள்ளது.

Advertisment

வரும் பொங்கல் தினத்தையொட்டி ஜனவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் ராதே ஷ்யாம் திரைப்படம் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கிருஷ்ண ஜெயந்தி தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு, படத்தின் சிறப்பு போஸ்டரை ராதே ஷ்யாம் படக்குழு வெளியிட்டுள்ளது.