யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது. நடிகர் பிரபாஸ் கைரேகை நிபுணராகநடித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் கரோனாமூன்றாவது அலை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் 'ராதே ஷ்யாம்' படத்தின்புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷியாம் திரைப்படம் மார்ச் 3ஆம்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இயக்குநர் பாண்டியராஜ்இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் மார்ச் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்களும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் அடுத்தடுத்த நாட்களில் வெளியாவதால் இரு படங்களுக்கும் கடும் போட்டி நிலவும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.