prabhas

Advertisment

‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடிப்பில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம்‘ராதே ஷியாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்தப் படத்தின் புதிய போஸ்டர் இன்று (11.03.2021) வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்தப் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இப்போஸ்டரை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த பிரபாஸ், ரசிகர்கள் அனைவருக்கும் சிவராத்திரி தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இத்தாலியில் ரோம் உள்ளிட்ட நகரங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், ஜுலை 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.