Advertisment

யுவன் குரலில் கவனம் ஈர்க்கும் பிரபாஸ் படத்தின் பாடல்

Aagoozhilae Video Song released

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது. நடிகர் பிரபாஸ் கைரேகை நிபுணராக நடித்துள்ள இப்படம் மார்ச் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஏற்கனவே இப்படத்தின் "ஆகூழிலே..." பாடலின்லிரிக்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படக்குழு "ஆகூழிலே..." பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது. யாரென்றே தெரியாத இருவர் சுவர் ஓவியத்தின் மூலம் காதல் வயப்படும் அழகான நிகழ்வுகளை இப்பாடல் உணர்த்துகிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன் ஷங்கர் ராஜா, ஹரிணி இருவரும் இணைந்து பாடியுள்ள இப்பாடலின் வீடியோ தற்போது பலரின்கவனத்தை பெற்று வருகிறது.

Advertisment

radhe shyam prabhas yuvan shankar raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe