Advertisment

சல்மான் கான் - பிரபுதேவா கூட்டணியில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

salman khan

Advertisment

சல்மான் கான் - பிரபுதேவா கூட்டணியில் உருவான 'தபங் 3' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. அப்படத்தைத் தொடர்ந்து, இக்கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'ராதே'.'வெடரன்' என்கிற தென்கொரியப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்தில், திஷா படானி, மேகா ஆகாஷ், ரன்தீப் ஹூடா, பரத்உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர்.

கரோனா ஊரடங்கு காலத்தில் இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்று தகவல் பரவ, திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். அதனையடுத்து, படம் திரையரங்கில் வெளியாகும் என சல்மான் கான் உறுதியளித்தார்.

இந்த நிலையில், ‘ராதே’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ரம்ஜான் தினத்தையொட்டி மே 13ஆம் தேதி ‘ராதே’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Salman Khan
இதையும் படியுங்கள்
Subscribe