Advertisment

அதர்வாவுடன் குருதி ஆட்டம் ஆடும் ராதாரவி மற்றும் ராதிகா சரத்குமார்! 

atharva

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

நடிகர் அதர்வா அடுத்ததாக 'எட்டு தோட்டாக்கள்' படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கும் புதிய படமான குருதி ஆட்டம் படம் நடிக்கிறார். மதுரைப் பின்னணியில் உள்ள கேங்க்ஸ்டர்களை பற்றிய ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்த படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் மற்றும் டபுள் மீனிங் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ராதாரவி மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் தற்போது ஒப்பந்தம் ஆகியுள்ளனர். மேலும் இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷ் பேசியபோது....

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

"ராதாரவி, ராதிகா என் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, நிச்சயமாக அவர்கள் இதில் நடிப்பது படத்திற்கு மிகப்பெரிய கவன ஈர்ப்பாக அமையும். இந்த கதையை எழுதியதில் இருந்தே இவர்களை தவிர வேறு யாரையும் என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை. முதலில் இவர்கள் என் கதையை கேட்பார்களா என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது, ஆனால் நான் கதாபாத்திரத்தை எழுதியிருந்த விதம் அவர்களை கவர்ந்தது என்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமான விஷயம். முழுமனதோடு இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்கள். இந்த படத்தின் நாயகி தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது, நாயகி அறிவிப்பு நிச்சயம் எல்லோரது கவனத்தையும் பெறும்" என்றார். வழக்கமான மிஷ்கின் பாணியில் சீட்டின் நுனிக்கே வரவைக்கும் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

kuruthiattam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe