"வசதி இலவசமாக வருவது சினிமாவில்தான்" - ராதா ரவி பேச்சு

Radha Ravi talk about kadalai poda ponnu venum movie

இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில் விஜய் டிவி அசார் 'கடலை போட ஒரு பொண்ணு வேணும்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மனிஷா ஜித் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காமெடி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்த படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் அசார். மன்சூர் அலிகான், நாஞ்சில் சம்பத், உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ராதா ரவி கூறுகையில்,"இந்த படத்தின் நாயகன் அசார் டிவியிலிருந்து வந்தவர் உனக்கு உதாரணமாக பலரை சொல்வார்கள் அதை கேட்க கூடாது. உனக்கு என்று தனியாக பெயர் கிடைக்கும், இந்தப்படத்தின் ஒரிஜினல் டைட்டில் தெரியும், ஆனால் சொல்ல மாட்டேன், இந்தப் படம்கண்டிப்பாக வெற்றிபெறும், நாஞ்சில் சம்பத் நான் நடிகன் இல்லை. ஆனால் இரண்டு படம் இருக்கு என்றார், ஆனால் இங்கு நடிகனுக்கு படமே இல்லை, உங்களுக்கு படம் இருக்கு என்று சந்தோஷப்படுங்கள், சினிமாவில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும், அதற்காக தான் நான் இன்றும் டிரெண்டிங்கில் இருக்கிறேன். வசதி இலவசமாக வருவது சினிமாவில் தான். தயாரிப்பாளர்களால் தான் சினிமா வாழ்கிறது. இந்தப் படம் பாடல் எல்லாம் அற்புதமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் மிரட்டியிருக்கிறார். சினிமா வாழ வேண்டுமானால் இந்த மாதிரி சின்ன படங்கள் ஓட வேண்டும். நான் அடுத்ததாக 10 சின்ன படங்கள் எடுக்க போகிறேன். ஒரு நல்ல செய்தி தயாரிப்பாளர்களுக்கும், பெப்சிக்கும் அமைச்சர் முன்னாள்ஒப்பந்தம் உருவாக போகிறது. அதனால் சினிமா கண்டிப்பாக வளரும், இந்தப் படம் டைட்டிலுக்கே ஓடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி" எனக் கூறியுள்ளார்.

radha ravi tamil cinema
இதையும் படியுங்கள்
Subscribe