"என்னுடைய 49 ஆண்டு கால அனுபவத்தில் இதுபோன்ற கதையை பார்த்ததில்லை" - ராதாரவி

Radha Ravi speech at  License Movie First Look Launch

தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகி ராஜலட்சுமிவெள்ளித்திரையில் அறிமுகமாகவுள்ள படம் 'லைசென்ஸ்'. கணபதி பாலமுருகன் இயக்கும் இப்படத்தில் ராஜலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு பேசினர்.

இந்த விழாவில் நடிகர் ராதாரவி பேசுகையில், "எல்லாருக்கும் வணக்கம். யூட்யூபர்ஸ்க்கும் வணக்கம், என்னை வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான். என்னைப் பற்றி எதாவது செய்தி போட்டு மக்களைப் பார்க்க வைக்கிறார்கள். வாழ வைப்பது என்பது மிகவும் சிரமமான விஷயம். அது மனைவி, பிள்ளைகள் யாராக இருந்தாலும் சரி.

அதனால்தான் ராஜலட்சுமியை இந்தப் படத்தில் பாரதி என்ற வேடத்தில் இயக்குநர் செலெக்ட் செய்துள்ளார். என்னிடம் கதை சொன்னார். இப்போது சொல்கிறேன், தமிழ் சினிமாவில் வராத கதை. என்னுடைய 49 ஆண்டு கால அனுபவத்தில் இதுபோன்றகதையை நான் பார்த்ததில்லை. சினிமாவிலும் சரி வாழ்க்கையிலும் சரி நாம் நம்மைக் காப்பாற்றிக் கொண்டால்தான் முடியும். இந்தப் படம் நிறைய விருதுகளைப் பெறும். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்." எனப் பேசியுள்ளார்.

ACTOR RADHA RAVI
இதையும் படியுங்கள்
Subscribe