Advertisment

”என் குடும்பத்தில் யாருக்கும் நடிக்க விருப்பமில்லை” - ராதாரவி வருத்தம் 

Radha Ravi

எஸ்.எஸ்.பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜா செல்வம் இயக்கத்தில் கார்த்திக் சிங்கா, அனயா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொடை’ . இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Advertisment

நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் ராதாரவி பேசுகையில், “இசையமைப்பாளருக்கு முதல் படம் போன்று தெரியவில்லை, அவருடைய இசை ஈர்க்கும்படி உள்ளது. இளைஞர்கள் திரைத்துறைக்கு வந்து ஜெயிக்க வேண்டும். இந்தப் படத்தின் கதாநாயகன் சிறப்பாக நடித்துள்ளார். ரோபோ சங்கர் மிகச்சிறந்த கலைஞன். அவர் பெரிய ஆளாக வரவேண்டும். சிங்கமுத்து என் குடும்பத்தில் ஒருத்தர். அவர் மகன் நடிகனாகியிருப்பது மகிழ்ச்சி. என் குடும்பத்திலிருந்து யாரும் நடிக்க வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். வாரிசுகள் சினிமாவிற்கு வந்தால்தான் நம் பெயர் நிலைக்கும். இந்தப் படத்தின் நாயகனுக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த படத்திற்கு உங்களது ஆதரவை கொடுத்து படத்தை வெற்றிபெறச் செய்யுங்கள்” எனக் கூறினார்.

Advertisment

radha ravi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe