Skip to main content

”கமல்தான் என்னை மன்மதலீலையில் சிக்க வைத்தார்” - ராதா ரவி கலகல பேச்சு

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

Radha Ravi Speech Kanal Audio Launch

 

சமயமுரளி இயக்கத்தில் காவ்யா பெல்லு, ஸ்ரீதர் மாஸ்டர், ஸ்வாதி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கனல். தி நைட்டிங்கல் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில்  ஜெய்பாலா தயாரிக்க, தென்மா மற்றும் சதிஷ் சக்ரவர்த்தி இசையமைத்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் ராதா ரவி பேசுகையில், “இந்தக் கனல் படத்தின் நாயகி காவ்யா சகோதரி நல்லா தமிழ் பேசுனாங்க. என் சினிமா கேரியரில் முதலில் கன்னடத்தில்தான் நடித்தேன். கமல்தான் இங்கு மன்மதலீலையில் சிக்க வைத்தார். ஸ்ரீதர் ஆடினாலே நல்லாருக்கும். அதேபோல் வேல்முருகன் மாரியாத்தாளுக்கு என்றே இருக்க ஆள்போல. நல்லா பாடுவார். வேல்முருகன் பாட்டு எப்பவுமே பிடிக்கும். வேல்முருகன் மனசுல இருந்து பாடியிருக்கார். மெட்ராஸ் கானா பாடல்களை  மேடையில் அழகாக பாடிய தம்பிகளுக்கு வாழ்த்துகள். 

 

இசையமைப்பாளர் தென்மா சிறப்பாக இசையமைத்துள்ளார். சதிஷும் மியூசிக் பண்ணிருக்கான். கேமராமேன் நல்ல உழைப்பைக் கொடுத்திருக்கார். இந்த ஹீரோயின் புரொடக்சன்ல இருந்தேன்னு சொன்னது ஆச்சர்யம். சமயமுரளி இந்தப்படத்தின் கதையைச் சொன்னார். அருமையாக இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களை நாம் குட்ட குட்ட அவர்கள் சிலிர்த்தெழுவார்கள். இயக்குநர் இப்படியொரு கதையை எடுத்ததற்கு வாழ்த்துகள். சிலர் நான் கீழ இருந்து வந்தேன் அதனால் இப்படி படம் எடுத்தேன் என்பார்கள். ஆனால் சமயமுரளி மேலே இருந்து வந்தவர். இப்ப யார் யாரோ நடிக்க வந்துட்டாங்க. நானூறு படம் நடித்துவிட்ட பிறகும் நானே சிலரிடம், நான் நடிப்பேன்னு சொல்ல வேண்டியுள்ளது.

 

இந்தக் கனல் படத்தை நான் பார்க்காமலே பேசமுடியும். இயக்குநரிடம் கனலா அனலா என்ன என்று கேட்டேன். நடிகை தமன்னாவை பார்த்து நான் வியந்தேன். அவ்வளவு கலராக இருப்பார். இந்தப்பொண்ணு காவ்யாவும் தமன்னா போல அவ்ளோ கலரு. படத்தில் சிறப்பாகவும் நடித்துள்ளார். கீழ இருப்பவர்களைப் பற்றி படம் எடுக்கும் சமயமுரளி மனசுக்கு இந்தப்படம் பெரிதாக ஹிட் ஆகும்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்