Advertisment

"பொய் பெயர்களை சூட்டி உண்மை கதையை எடுத்தால் படம் நல்லா ஓடும்" - நடிகர் ராதா ரவி பேச்சு!

Radha Ravi

Advertisment

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிப்பில் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்’. இப்படம் விரைவில் திரையங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரசாத் லேபில் நடைபெற்றது. இயக்குநர் ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர்கள் ராதாரவி, பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி பாலா உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் நடிகர் ராதா ரவி பேசுகையில், "இந்தக் கதையை என் கிட்டே சொல்றதுக்காக மாறன் வந்தபோது, கிட்டத்தட்ட மூன்றுமுறை அவரை திரும்பத் திரும்ப வரவைத்து கதை கேட்டேன். ஏன்னா இந்தப் படத்துல நடிக்கலாமா, ஏதாவது சிக்கல் வருமா அப்படின்னு யோசிக்கிறதுக்காகத்தான். படத்துல முதலமைச்சராக நடிச்சிருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே எழுதப்பட்ட கதை இது. அப்ப யாரு முதலமைச்சராக இருந்தாங்கன்னு உங்களுக்குத் தெரியும். படம் பார்க்கும்போது யாரைப் பிரதிபலிச்சிருக்கேன்னு தெரியும். ஆனால் இந்த நேரத்துல இந்தப் படம் வெளியாகும்போது யாரு என்னவிதமாக நினைத்துக்கொள்வார்கள்னு தெரியல.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6643e81a-1376-437d-9f54-88401e1a8c7a" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_30.jpg" />

Advertisment

இந்தப் படம் வெளியாவதற்கே மாறனுக்கு நிறைய எதிர்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. நிஜம்தான். அத்தனை பேர் படத்தைக் கழுவி ஊத்திருக்கார். நிச்சயம் காத்துக்கிட்டுதான் இருப்பாங்க. திட்டத்தான் செய்வாங்க. அதேசமயம் படம் வெளியாகும்போது மாறனுக்கு வாழ்த்தும் கிடைக்கும். ஒரு படத்தைப் படமா பாருங்க. படம் முடிந்ததும் அதை தியேட்டர்லயே விட்டுட்டு வந்துருங்க.விஜய் ‘பைரவா’ன்னு ஒரு படத்துல மெடிக்கல் காலேஜ் மோசடி பத்தி சொல்லிருந்தாரு. ஆனால் அவ்வளவு பெரிய ஹீரோ சொல்லிட்டாருன்னு உடனே திருந்தவா போறாங்க. அதுக்குப் பின்னாடி இதே மாதிரி ரெண்டு காலேஜ் திறந்துட்டாங்க..

நிச்சயம் இந்தப் படம் வெளியானதும் இதுக்கு விவாத மேடை நடத்துறதுக்குத் தயாரா ஒரு கூட்டம் இருக்கும்.இந்தக் காலத்துல கான்ட்ரவர்ஸியா படம் எடுத்தா நிச்சயமா ஓடும். இப்பதான் பொய் பெயர்களைச் சூட்டி உண்மைக் கதைன்னு படம் எடுக்கிறாங்கள்ல. அதெல்லாம் நல்லாத்தானே ஓடுது" என்றார்.

ACTOR RADHA RAVI
இதையும் படியுங்கள்
Subscribe