Advertisment

”அவரை நேரில் பார்த்ததில்லை; என் நெஞ்சையே உலுக்கிவிட்டது” - எமோஷனலான ராதா ரவி 

Radha Ravi

Advertisment

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 24ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற மாமனிதன் திரைப்படம், ஆஹா ஓடிடி தளத்திலும் தற்போது வெளியாகியுள்ளது.

சிறப்புக்காட்சியில் படம் பார்த்த நடிகர் ராதா ரவி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “இயக்குநர் சீனு ராமசாமியை நான் நேரில் பார்த்ததேயில்லை. படம் பார்க்க வாருங்கள் என்று போனில்தான் அழைத்தார். இதுவரை அவரை ரொம்பவும் மிஸ் செய்திருக்கிறேன். மாமனிதன் அற்புதமான படம். விஜய் சேதுபதி சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் வரும் எல்லா கதாபாத்திங்களுமே பேசப்படக்கூடிய அளவில் நடித்துள்ளன. இது பெரிய பெரிய திருப்பங்கள் நிறைந்த கதையெல்லாம் கிடையாது. அனைவருமே குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக்கூடிய படம். வாழ்க்கையில் ஏமாறக்கூடாது, ஏமாந்தால் தற்கொலை செய்யக்கூடாது, எதிர்த்துப் போராட வேண்டும் எனப் பல விஷயங்களைக் கலந்து சொல்லியிருக்கிறார்.

மாமனிதன் படம் என் நெஞ்சை உலுக்கிவிட்டது. படத்தின் முடிவு ரொம்பவும் சிறப்பாக இருந்தது. இயக்குநர் சீனு ராமசாமிக்கு என்னுடைய பாராட்டுகள். இந்தப் படத்தை பாராட்ட என்னிடம் வார்த்தைகளே இல்லை. இயக்குநர் மட்டும் என்னை அழைத்திருக்காவிட்டால் நல்ல படத்தை மிஸ் செய்திருப்பேன். அதனால் அவருக்கு நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

ACTOR RADHA RAVI
இதையும் படியுங்கள்
Subscribe