பிரபல ஓடிடி தளமான 'ஜீ5'-ல் வெளியான ‘லாக்கப்’ வெற்றிக்குப் பிறகு வைபவ் - வாணி போஜன் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘மலேஷியா டு அம்னீஷியா’. ஜீ5 ஒரிஜினலாக உருவாகியுள்ள இப்படம் வரும் மே 28 அன்று ஜீ5 தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள ‘மலேஷியா டு அம்னீஷியா’ படத்தைப் பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். மங்கி மேன் கம்பெனி தயாரித்துள்ள இப்படத்தில் பிரபல நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இசை சுனாமி பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)