rachitha mahalashmi issue

சின்னதிரை தொடர்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரட்சிதா. தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். மேலும் சில கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் தலை காண்பித்துள்ளார். இவர் தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த சக நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisment

இவர்களது திருமணம் 2013 ஆம் ஆண்டு நடந்த நிலையில் இப்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. இந்நிலையில் மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினேஷ் மீது ரட்சிதா புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், "கடந்த சில நாட்களாக எனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புகிறார். மேலும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுகிறார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் தினேஷை விசாரணைக்கு அழைத்தனர். விசாரணைக்கு வந்த தினேஷ், “வேண்டுமென்றால் ரட்சிதா விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடிக் கொள்ளலாம்” எனத்தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சின்னதிரை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.