
ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்து இருக்கும் படம் 'ரேசர்'. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்ட் செய்து இருக்கிறார் சதீஷ். அகில் சந்தோஷ் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்திற்கு பரத் என்பவர் இசை அமைத்திருக்கிறார்.
தந்தை மகனுக்கு இடையேயான பிரச்சனையை மையமாக கொண்டு இதன் கதை அமைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்துக்காக பாண்டிச்சேரியில் பெரும் பொருட் செலவில் பைக் ரேஸ் நடக்கும் பந்தய மைதானம் அமைக்கப்பட்டது. இந்த போட்டியின் முக்கிய காட்சிகள் ஏற்காட்டில் படமாக்கப்பட்டது. மேலும் சில முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டிருக்கிறது.
மோட்டார் ரேஸ் காட்சிகளில் நிஜ ரேஸ் வீரர்களுடன் ஹீரோ அகில் போட்டிபோட்டு பைக் ஓட்டினார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது.