Skip to main content

ராயன் படத்தின் அப்டேட்; அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Raayan's film 3rd single releasing update

முன்னணி நடிகரான தனுஷ், தற்போது தனது 50வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ‘அடங்காத அசுரன்’ எனும் பாடல் கடந்த மே 9ஆம் தேதி வெளியாகி, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இப்பாடலை தனுஷ் எழுதியிருக்க தனுஷ், ஏ.ஆர் ரஹ்மான் இருவரும் பாடியிருந்தனர்.  இதனை தொடர்ந்து, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடிய ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் வெளியானது. கானா காதர் எழுதியுள்ள இப்பாடல் கானா ஸ்டைலில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

இந்த நிலையில்,  ‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற நாளை (06-7-24) சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட இருக்கிறது. இந்த விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் நேரம் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. ‘ராயன் ரம்புள்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்பாடல், குத்து பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்தப் பாடலை கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

சார்ந்த செய்திகள்