Advertisment

அடுத்த படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த ‘மதயானைக் கூட்டம்’ பட இயக்குநர்!

ravana kottam

Advertisment

கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய விக்ரம் சுகுமாறன், 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ‘இராவண கோட்டம்’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் ஏற்பட்ட கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாகத் தடைப்பட்டது.

இயல்புநிலை திரும்பிவந்ததையடுத்து, சமீபத்தில் இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பை ராமநாதபுரத்தில் தொடங்கிய படக்குழு, தற்போது மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்த மகிழ்ச்சியைப் படப்பிடிப்பு தளத்தில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

vikram sugumaran shanthanu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe