/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/494_6.jpg)
ஷாந்தனு பாக்யராஜ், ஆனந்தி, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இராவண கோட்டம்'. கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த மாதம் 12ஆம் தேதி வெளியானது.
முன்னதாக இப்படம் ஒரு சில சமூகத்தினரை காயப்படுத்தியுள்ளதாக பேச்சுகள் எழுந்த நிலையில் "இப்படம் எவரையும் எந்த வகையிலும் காயப்படுத்தவில்லை. தயவு கூர்ந்து வதந்திகளை நம்பி படத்தின் மீது தடை கோருவதும் படத்தை தடுக்கும் நோக்கிலான செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம்" என குறிப்பிட்டு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. பின்பு இப்படத்தை பார்த்த திருமாவளவன் எம்.பிபடக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 16ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது எனபடக்குழு தரப்பு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)