Advertisment

கமர்ஷியல் நடிகையாக இருந்துவிட்டு போக விரும்பவில்லை - ராஷி கண்ணா 

irumbu thirai.jpeg

raashi kanna

நடிகர் அதர்வாவுடன் 'இமைக்கா நொடிகள்' படத்தில் நாயகியாக நடிக்கும் ராஷி கண்ணா தெலுங்கில் முன்னணி நடிகையாவார். இவர் தற்போது தமிழிலும் பிஸியான நடிகையாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். விஷாலுடன் 'அயோக்யா', சித்தார்த்துடன் 'சைத்தான் கே பச்சா', ஜெயம் ரவியுடன் 'அடங்க மறு', ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா தான் நடிக்கும் படங்களை எப்படி தேர்வு செய்கிறார் என்பதை பற்றி ஒரு பேட்டியில் பேசியபோது...."இப்போதைய காலகட்டத்தில் நிறைய நல்ல நல்ல கதைகள் வருகின்றன. கதையையும் அதில் எனது பங்களிப்பையும் தான் முதலில் பார்ப்பேன். ஒரு சாதாரண கமர்ஷியல் நடிகையாக இருந்துவிட்டு போக விரும்பவில்லை. முழு பவுண்டட் ஸ்க்ரிப்டையும் முதலில் படிப்பேன். அதன் பின்னர் ஒவ்வொரு காட்சியிலும் என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனத்தில் கொண்டே படத்தை தேர்ந்தெடுக்கிறேன்" என்றார்.

Advertisment
raashikanna
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe