Skip to main content

கமர்ஷியல் நடிகையாக இருந்துவிட்டு போக விரும்பவில்லை - ராஷி கண்ணா 

Published on 17/05/2018 | Edited on 18/05/2018
irumbu thirai.jpeg

 

 

raashi kanna


நடிகர் அதர்வாவுடன் 'இமைக்கா நொடிகள்'  படத்தில் நாயகியாக நடிக்கும் ராஷி கண்ணா தெலுங்கில் முன்னணி நடிகையாவார். இவர் தற்போது தமிழிலும் பிஸியான நடிகையாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். விஷாலுடன் 'அயோக்யா', சித்தார்த்துடன் 'சைத்தான் கே பச்சா', ஜெயம் ரவியுடன் 'அடங்க மறு', ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா தான் நடிக்கும் படங்களை எப்படி தேர்வு செய்கிறார் என்பதை பற்றி ஒரு பேட்டியில் பேசியபோது...."இப்போதைய காலகட்டத்தில் நிறைய நல்ல நல்ல கதைகள் வருகின்றன. கதையையும் அதில் எனது பங்களிப்பையும் தான் முதலில் பார்ப்பேன். ஒரு சாதாரண கமர்ஷியல் நடிகையாக இருந்துவிட்டு போக விரும்பவில்லை. முழு பவுண்டட் ஸ்க்ரிப்டையும் முதலில் படிப்பேன். அதன் பின்னர் ஒவ்வொரு காட்சியிலும் என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனத்தில் கொண்டே படத்தை தேர்ந்தெடுக்கிறேன்" என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

"இது பல ஏழைக் குடும்பங்களை பட்டினியில் தள்ளிவிட்டது" - ராஷி கண்ணா வேதனை!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

gdgdvgds

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், நடிகை ராஷி கண்ணா கரோனாவால் உணவின்றித் தவிக்கும் மக்கள் குறித்து வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அதில்...

 

“கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து சாமானிய மக்கள் படும் பாட்டை சகிக்க முடியவில்லை. நிறைய குடும்பங்கள் கொடுமையான சூழலில் இருக்கின்றன. தொண்டு நிறுவனம் மூலம் என்னால் முயன்ற உதவிகளை வழங்கிவருகிறேன். இன்று லட்சக்கணக்கான மக்கள் உயிர் வாழத் தேவைப்படுவது ஆக்சிஜனும், உணவும்தான். இந்தப் பெருந்தொற்றால் பசியின் குரல் பலரின் காதுகளில் விழுவதில்லை. வாழ்வாதாரப் பற்றாக்குறையாலும், வருமானம் குறைந்துபோனதாலும் அடிப்படை தேவையான உணவுக்கே வழியில்லாமல் போய், இந்தப் பெருந்தொற்றின் இரண்டாம் அலை பல ஏழைக் குடும்பங்களைப் பட்டினியில் தள்ளிவிட்டது. கரோனா வைரசுக்கு முன்னால் பசியே அவர்களைக் கொன்றுவிடும்போல் உள்ளது. பல உதவி அமைப்புகளுக்குப் பணம் பற்றாக்குறையாக உள்ளது. நான் தனிப்பட்ட முறையில் இந்தப் பெருந்தொற்று நேரத்தில் பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு சாப்பாடு கொடுக்கிறேன். இப்போது உங்கள் உள்ளங்களைக் கொஞ்சம் திறந்து உதவ வேண்டிய நேரம் இது. உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாவிட்டாலும் ஒருவருக்காவது உணவு கொடுங்கள்” என கூறியுள்ளார்.

 

 

Next Story

‘ஜெயம் ரவி ரொம்ப டெரரான ஆளுன்னு நினைச்சேன்’ நடிகை ராஷி கண்ணா சிறப்பு நேர்காணல் (வீடீயோ)

Published on 22/12/2018 | Edited on 22/12/2018

இமைக்கா நொடிகள், அடங்க மறு திரைப்படங்களின் நாயகி நக்கீரனுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் வீடியோ இணைப்பு.