Advertisment

 “என் வாழ்க்கையின் மோசமான கட்டம் அது” - மனம் திறந்த ராஷி கண்ணா

raashi khanna about her love failure

தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து தமிழில் இமைக்கா நொடிகள் மூலம் தமிழுக்கு அற்முகமானவர் ராஷி கண்ணா. பின்பு தொடர்ந்து அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலம் என பல்வேறு நடித்து பிரபலமானார். கடைசியாக சுந்தர்-சியின் அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் இந்தியில் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தை தீரஜ் சர்ணா இயக்க விக்ராந்த் மாஸ்ஸி கதாநாயகனாக நடித்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படம் நாளை(15.11.2024) வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisment

அந்த வகையில் ஒரு பேட்டியில் ராஷி கண்ணா தனக்கு நேர்ந்த காதல் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “எனக்கு காதல் தோல்வி ஏற்பட்ட போது மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். அந்த கட்டம் எனது வாழ்க்கையின் மோசமான கட்டம். நண்பர்களின் பேச்சும் வேலையும் தான் நேர்மறையான தாக்கத்தை கொடுத்து மனச் சோர்விலிருந்து வெளியே வர உதவியது” என்றார்.

Raashi Khanna
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe