Advertisment

"என்னை அதற்கு அழைத்தால் சும்மா விடமாட்டேன்..." ராஷி கண்ணா ஆவேசம்! 

raashi kanna

பிரபல தெலுங்கு நடிகையான ராஷி கண்ணா தற்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நயன்தாராவுடன் ‘இமைக்கா நொடிகள்’, சித்தார்த்துடன் ‘சைத்தான் கா பச்சா’, ஜெயம் ரவியுடன் 'அடங்க மறு' படத்திலும் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தெலுங்கு பட உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் ஸ்ரீலீக்ஸ் விவகாரம் குறித்து ராஷி கண்ணா பேசியபோது..."நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. எனக்கு அதுமாதிரி சம்பவங்கள் இது வரை நடக்கவில்லை. என்னை யாரேனும் அழைத்தால் சும்மா விட மாட்டேன். அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பேன். போராடவும் தயங்க மாட்டேன். எனக்கு யார்மீதும் பயம் கிடையாது. சமீபத்தில் ஜார்ஜியா சென்ற போது மலைப்பாம்பையே கையில் பிடித்து பக்கத்தில் நின்றவர்களை அதிர வைத்தேன். இந்த தைரியம் எனது பாட்டியிடம் இருந்து வந்தது. அவருக்கும் பயம் கிடையாது" என்றார்.

Advertisment
raashikanna
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe