Published on 30/01/2019 | Edited on 30/01/2019

விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் 'மாமனிதன்' படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் அடுத்ததாக வாலு, ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விஜயா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்கவுள்ள நிலையில் இப்படத்தின் நாயகியாக ராஷி கண்ணா நடிக்கவிருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் காமெடி நடிகர் சூரியும் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. வட சென்னையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்கள்.