Raame Aandalum Raavane Aandalum

இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ திரைப்படம் கிராமிய வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள சமூக நையாண்டி வகை திரைப்படமாகும். மனிதநேய உணர்வுகளையும் நகைச்சுவையையும் கலந்து உருவாகியுள்ள இப்படத்தில் மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகேசன், ரம்யா பாண்டியன், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அமேசான் பிரைம் நிறுவனம் 2டி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார்.

Advertisment