/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitleddf.jpg)
'கற்றது தமிழ்' படம் தமிழில் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் ராம் 'தங்கமீன்கள்', 'பேரன்பு' படங்கள் மூலம் பிரபலமானார். இவருக்கென்று தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்ற நிலையில் இவர் அடுத்ததாக மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் நிவின் பாலி தமிழில் 'நேரம்' படம் மூலம் அறிமுகமாகி பின் 'ரிச்சி' படம் மூலம் பிரபலமானார். இப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த நிவின் பாலி தற்போது இயக்குனர் ராம் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)