Advertisment

'சிண்ட்ரல்லா'வாக மாறும் லட்சுமி ராய் 

raai lakshmi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் 'சிண்ட்ரல்லா' கதாபாத்திரம் தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட 'சிண்ட்ரல்லா' தலைப்பில் தமிழில் ஒரு படம் உருவாகிறது. லட்சுமி ராய் நாயகியாக வேடமேற்று பேண்டஸி ஹாரர் த்ரில்லர் எமோஷனல் டிராமாவாக உருவாகும் இப்டத்தை இயக்குபவர் எஸ்.ஜே சூர்யாவின் உதவி இயக்குனர் வினோ வெங்கடேஷ். இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் வினோ வெங்கடேஷ் பேசும்போது.... "இது வழக்கமான ஹாரர் காமெடி படமல்ல. பார்க்க புதுசாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும். படம் பற்றிப் பேச ஆரம்பித்ததுமே தலைப்பு தான் எல்லாருக்கும் பிடித்தது. அதன் மீது ஈர்ப்பு வந்தது. தயாரிப்பாளர் தயாரிக்க முன் வந்தார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

அவரும் தலைப்பு பிடித்து தான் கதை கேட்டார். நடிகை லட்சுமிராய்க்கு படம் பற்றிய குறிப்புகளை அனுப்பினோம். பிறகு படப்பிடிப்பிலிருந்த அவரை மதிய உணவு இடைவேளையில்தான் போய்ப் பார்த்தோம். சாப்பிடாமல் அரை மணி நேரம் கதை கேட்டார். நாங்கள் அனுப்பியிருந்த கதைச் சுருக்கம் , குறிப்புகளைப் பார்த்துவிட்டு ஏற்கெனவே ஓர் இணக்கமான புரிதலோடுதான் இருந்தார், கதையைக் கேட்டு விட்டு சம்மதம் கூறினார். மேலும் ஒரு வார அவகாசத்தில் சில விளக்கங்கள் கேட்டார். தெளிவு பெற்றார். இப்போது முழுமையாக 'சிண்ட் ரல்லா'வுக்குள் புகுந்து விட்டார்" என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

julie2 raailakshmi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe