Skip to main content

'சிண்ட்ரல்லா'வாக மாறும் லட்சுமி ராய் 

Published on 11/08/2018 | Edited on 11/08/2018
raai lakshmi

 

 

 

உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் 'சிண்ட்ரல்லா' கதாபாத்திரம் தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட 'சிண்ட்ரல்லா' தலைப்பில் தமிழில் ஒரு படம் உருவாகிறது. லட்சுமி ராய் நாயகியாக வேடமேற்று பேண்டஸி ஹாரர் த்ரில்லர் எமோஷனல் டிராமாவாக உருவாகும் இப்டத்தை இயக்குபவர் எஸ்.ஜே சூர்யாவின் உதவி இயக்குனர் வினோ வெங்கடேஷ். இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் வினோ வெங்கடேஷ் பேசும்போது.... "இது வழக்கமான ஹாரர் காமெடி படமல்ல. பார்க்க புதுசாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும். படம் பற்றிப் பேச ஆரம்பித்ததுமே தலைப்பு தான் எல்லாருக்கும் பிடித்தது. அதன் மீது ஈர்ப்பு வந்தது. தயாரிப்பாளர் தயாரிக்க முன் வந்தார்.

 

 

 

அவரும் தலைப்பு பிடித்து தான் கதை கேட்டார். நடிகை லட்சுமிராய்க்கு  படம் பற்றிய குறிப்புகளை அனுப்பினோம். பிறகு படப்பிடிப்பிலிருந்த அவரை மதிய உணவு இடைவேளையில்தான்  போய்ப் பார்த்தோம். சாப்பிடாமல் அரை மணி நேரம் கதை கேட்டார். நாங்கள் அனுப்பியிருந்த கதைச் சுருக்கம் , குறிப்புகளைப் பார்த்துவிட்டு ஏற்கெனவே ஓர் இணக்கமான புரிதலோடுதான் இருந்தார், கதையைக் கேட்டு விட்டு  சம்மதம் கூறினார். மேலும் ஒரு வார அவகாசத்தில் சில விளக்கங்கள் கேட்டார். தெளிவு பெற்றார். இப்போது முழுமையாக 'சிண்ட் ரல்லா'வுக்குள் புகுந்து விட்டார்" என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நான் தனி ஆள் இல்லை! - ராய் லட்சுமி பன்ச்

Published on 24/03/2018 | Edited on 26/03/2018

raai


நடிகை வித்யா பாலன் நடிப்பில் வெளிவந்த 'டர்ட்டி பிக்சர்' பாணியில் நடிகை ராய் லட்சுமி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'ஜூலி 2' படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை என்றாலும் நடிப்பில் ராய் லட்சுமிக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இதனால் ஹிந்தி பட உலகில் நன்கு அறியப்பட்டவருக்கு ஹிந்தி பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் தனது ஹிந்தி சினிமாவையும், குடும்பத்தையும் பற்றி ராய் லட்சுமி பேசும்போது.... "பெரிய ஹீரோ படத்தில் அறிமுகமாகி, பிரபலமாக வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவார்கள். நானும் அப்படித்தான் ஆசைப்பட்டேன். என் 50வது படத்தில் நாயகியை மையமாக வைத்து ஒரு கதையில் நடிக்க விரும்பினேன்நான் எதிர்பார்த்தப்படியே கதை கிடைத்தது. எனவே தான் 'ஜூலி 2' படத்தில் நடித்தேன். எதிர்பார்த்த அளவு அந்த படம் ஓடவில்லை என்று நான் கவலைப்படவில்லை. ஹிந்தி பட உலகில் நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது. இந்த படம் மூலம் ஹிந்தி படங்களில் நடிப்பதற்கான கதவுகள் இப்போது திறந்து இருக்கின்றன. நான் தனி ஆள் இல்லை. எனக்கு எப்போதும் ஆதரவாக இருப்பவர் என் சகோதரி தான். எனது குழந்தை பருவத்தில் இருந்தே அவர் எனக்கு ஆதரவாக இருக்கிறார். சினிமா துறைக்கு நான் வந்தபிறகு எனக்கு முதுகெலும்பு போல ஆகிவிட்டார். எந்த ஒரு பிரச்சனை என்றாலும் ஒரு போன் செய்தால் போதும் என் சகோதரி பார்த்துக்கொள்வார்" என்றார்.