Radhika prays recovery Bharathiraja

இயக்குநர்பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பாரதிராஜாவின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், நான்கு நாட்களில் வீடு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவீடு திரும்புவார் எனத்தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா விரைவில் குணமடைய வேண்டி நடிகை ராதிகா சரத்குமார் பிரான்சில் உள்ள சர்ச் ஒன்றில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்துள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பகிர்ந்தராதிகா சரத்குமார், “என் இனிய இயக்குநர் பாரதிராஜா அவர்களே, நீங்கள் விரைவில் குணமடைய எனது சிறப்பு பிரார்த்தனை. உங்களை விரைவில் பார்க்க வேண்டும், உடல் ஆரோக்கியத்துடன் இருங்கள். உங்களுடன் பேசுவதை மிஸ் செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment