style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
'இவன் தந்திரன்' படத்தையடுத்து இயக்குனர் ஆர்.கண்ணன் தற்போது இயக்கியுள்ள படம் 'பூமராங்'. அதர்வா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடக்கவுள்ளது. தமிழில் அறிமுக இசையமைப்பாளரான ரதன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இசையமைப்பாளர் ஆவார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதனால் பூமராங் படத்துக்கு இசை வெளியாகும் முன்பே மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கின்ற நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்து இயக்குனர் ஆர்.கண்ணன் பேசும்போது... "மிகச்சரியாக, நேர்மையாக சொல்வதென்றால், நான் அர்ஜுன் ரெட்டிக்கு முன்பே ரதனின் மிக பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன். தமிழ் மற்றும் தெலுங்கில் தனித்துவமான இலக்கணத்தை கொண்டு, உணர்வுகளை தூண்டும் இசையை வழங்கி வருகிறார். வெறும் இசையமைப்பதில் மட்டுமல்லாமல், மிக்ஸிங் செய்வதிலும், பாடல்களை முழுமையாக கொடுப்பதிலும் ரதன் செலுத்தும் கவனம் சிறப்பானது. அவருடன் இணைந்து பணிபுரிந்தது மொத்த 'பூமராங்' குழுவுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">