Quotation Gang movie updates

Advertisment

விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி மற்றும் சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொட்டேஷன் கேங்'. காயத்ரி சுரேஷ், விவேக் குமார் கண்ணன் தயாரிக்கும் இப்படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசை அமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.

இப்படம் குறித்து இயக்குநர் விவேக் பேசுகையில், "எல்லா பெற்றோருக்கும் போதை பொருள் பற்றி தெரிய வேண்டும். நிறைய பேருக்கு தெரியவில்லை. படத்தில் அதை பற்றி பேசியிருக்கிறோம். இறுதியில் தப்பு என்பதையும் சொல்லியிருக்கிறோம். போதை பழக்கம் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. அதனால் போதை பழக்கத்தில் இருக்கும் மற்றொரு பக்கத்தையும் விரிவாக காட்டியிருக்கிறோம். கவனமாகவும் கையாண்டிருக்கிறோம். இந்த படத்தை குழந்தைகளுக்கு காட்டவே கூடாது என நினைக்கிறன். ஆனால் பெற்றோர் கண்டிப்பாக வேண்டும். அது தான் எங்களின் நோக்கம்" என்றார்.