Advertisment

சன்னிலியோன் இமேஜை இந்தப் படம் மாற்றும்!

quotation gang movie trailer

ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Advertisment

இந்நிகழ்வில் நடிகை ப்ரியாமணி பேசியதாவது "இயக்குநர் விவேக்கிற்கு நன்றி. இவர் என்னிடம் சொன்ன முதல் கதை சில காரணங்களால் டேக் ஆஃப் ஆகவில்லை. இரண்டாவது சொன்ன இந்தக்கதை பிடித்துவிட்டது. என்னுடைய கரியரில் காண்ட்ராக்ட் கில்லர் ரோல் இதுவரை செய்ததில்லை. இயக்குநர் விவேக்கின் சகுந்தலா கதாபாத்திரத்தை நன்றாக நடித்திருக்கிறேன் என நம்புகிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக பணியாற்றினார்கள்.

Advertisment

quotation gang movie trailer

எனக்கும் அக்‌ஷயாவுக்கும்தான் நிறைய காம்பினேஷன் காட்சிகள். அக்‌ஷயா சிறப்பாக செய்திருக்கிறார். சன்னி பற்றி வேறொரு இமேஜ் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தில் அவருடைய பத்மா கதாபாத்திரம் உங்கள் எண்ணத்தை மாற்றிவிடும். ஜாக்கி ஷெராப் சாரும் எங்களுக்கு சப்போர்ட்டாக இருந்தார். படம் ஜூலையில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்

இந்நிகழ்வில் நடிகை சன்னி லியோன் பேசியதாவது, "இந்தப் படத்தில் எனக்கு நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. என்னைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இந்தப் படம் நிச்சயம் மாற்றும். படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

படங்கள் : எஸ்.பி.சுந்தர்

sunny leone trailer launch
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe