Skip to main content

அஜித் குறித்த கேள்வி; இயக்குநர் அமீர் காட்டமான பதில்

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

Question about Ajith; Director Ameer Answer

 

விமல் - தன்யா ஹோப் நடிப்பில் ‘குட்டிபுலி’ சரவண சக்தி இயக்கத்தில் விஜய் சேதுபதி வசனத்தில் உருவாகியுள்ள படம் ‘குலசாமி’. இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு இப்படத்தின் நடிகர்  மற்றும் நடிகை  வராதது வருத்தமளிப்பதாகப் பேசினார்

 

அமீர் பேசியதாவது, ”பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகமாக வெளிவந்தது. அதன் முதல் பாகத்தின் புரொமோஷனில் அதில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொண்டார்கள். அதே சமயத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியவை பெரிய அளவில் புரொமோஷனாக அமைந்தது. இரண்டாவது பாகத்தின் புரொமோஷனுக்காக அதில் நடித்த நடிகர், நடிகைகள் தனி விமானம் எடுத்துக் கொண்டு ஊர் ஊராகப் போகிறார்கள். ஆனால் குலசாமி படத்தின் நடிகரும், நடிகையும் இந்த டிரைலர் வெளியீட்டிற்கு வரவில்லை. அவர்களுக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் இந்த டிரைலர் வெளியீட்டிற்கு வந்திருக்க வேண்டும். வராதது வருத்தமளிக்கிறது” என்றார்.

 

மேலும் பத்திரிகையாளர்கள் கேட்ட, ‘அஜித் கூட இதே போல படத்தின் புரொமோஷன் போன்ற நிகழ்வுக்கு வருவதில்லை’ என்ற கேள்விக்கு, ‘ம்க்கும்’ என்று நக்கலாக சிரித்த பின், “யார் வராங்க வரவில்லை என்பது குறித்து பேசவில்லை. வருவது, வராதது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். இன்று சினிமா புரொமோஷன் பண்ண வேண்டிய அவசியத்தில் இருக்கிறது. முன்பை போல நூறு நாட்கள் ஓடுவதில்லை. முதல் வாரத்தில் கிடைக்கிற வருமானம் தான் லாபமாகும். பெரிய நிறுவனங்களும், நடிகர்களும், இயக்குநர்களும் ஒரு படத்திற்காக போராடுகிறார்கள் எனும் போது சிறிய படத்தின் புரொமோஷனில் கலந்துகொள்ள வேண்டிய பொறுப்பு நடிகர், நடிகைகளுக்கு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருப்பதி கோவிலில் நடிகர் அஜித் சாமி தரிசனம்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Darshan of Ajith Sami in Tirupati Temple!

அஜித் குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தைத் தொடர்ந்து அஜித் மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி’படத்தில் நடித்து வருகிறர். 

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதரராபத்தில் நடந்துவந்தது. இதில் அஜித் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அண்மையில் முதற்கட்ட படபிடிப்பு முடிவடையும் நிலையில் இரண்டாம் கட்ட படபிடிப்பு இன்னும் சில வாரங்கள் கழித்து தொடங்கும் எனக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தில் எஞ்சியுள்ள படப்பிடிப்பை நிறைவு செய்ய அஜித் வெளிநாடு செல்லவுள்ளார். விடாமுயற்சியின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மீதம் 20 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே மீதி உள்ளது. இதையடுத்து இந்த மாத இறுதியில் விடாமுயற்சி படக்குழு வெளிநாடு செல்லவுள்ளது. இந்த நிலையில் தான் வெளிநாடு செல்லும் முன்பு திருப்பதி கோவிலுக்குச் சென்று நடிகர் அஜித்குமார் சாமிதரிசனம் செய்துள்ளார். பட்டு வேஷ்டி சட்டையுடன் வந்த அஜித், சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டார். 

Next Story

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் 'அரண்மனை 4'  !

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
aranmanai 4 ott release date

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர்.சியின் "அரண்மனை 4" திரைப்படத்தை  ஜூன் 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர்.சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கமர்ஷியல் என்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதில்  மாஸ்டர் என்று அறியப்பட்ட சுந்தர் சி மீண்டும் ஹாரர் காமெடியில் ஒரு அழுத்தமான கதையுடன் இப்படத்தைத் தந்துள்ளார். அரண்மனை 4 முந்தைய படங்களின் கதைக்களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு புத்துணர்ச்சியூட்டும் புதிய கதைக்களத்தைக் கொண்டுள்ளது, அரண்மனை 4 அசாமிய நாட்டுப்புறக் கதைகளில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஒரு ஆவியை அடிப்படையாகக் கொண்டது. இது பாக் எனப்படும் நீர் ஆவியைப் பற்றியது, இது தண்ணீரில் வசிக்கும் மற்றும் அது தொடர்பு கொள்ளும் எந்த மனிதனின் வடிவத்தையும்  எடுக்க முடியும். இப்படம் ரசிகர்களை நடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஹாரர் கலந்து காமெடியுடன் அனைவரும் ரசிக்கும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது.