kajal agarwal

பாலிவுட்டில் கங்கணா ரனாவத் நடிப்பில் வெளியாகி பலரையும் கவர்ந்த படம் 'குயின்'. இந்தப்படம் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் காஜல் அகர்வால் நடித்திருந்தார்.

Advertisment

மேலும் 'குயின்' படத்தின் தமிழ் மற்றும் கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த்இயக்கியிருந்தார். தமிழில் 'பாரிஸ் பாரிஸ்' என்றும், கன்னடத்தில் 'பட்டர்ஃபிளை' என்றும் பெயரிடப்பட்டிருந்தது.

Advertisment

கன்னட ரீமேக்கில் பருல் யாதவ் நடித்துள்ளார். மலையாளத்தில் ஸாம் ஸாம் என்ற பெயரில் மஞ்சிமா மோகன் நடிப்பில் நீலகண்ட ரெட்டி இயக்கியுள்ளார். தெலுங்கில் தட் ஈஸ் மகாலட்சுமி என்ற பெயரில் தமன்னா நடிப்பில் பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளார்.

இந்நிலையில் குயின் பட ரீமேக்கின் இந்த நான்குப் பதிப்புகளும் அமேசான் ஓ.டி.டி. தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment