Advertisment

'குயின் 2' - வைரலாகும் ரம்யாகிருஷ்ணன் புகைப்படம்

'Queen 2' - Ramyakrishnan photo goes viral

Advertisment

2019-ஆம் ஆண்டு கௌதம் மேனன் மற்றும் பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான இணை தொடர் 'குயின்'. இந்த தொடர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டு இருந்தது. ஜெயலலிதாவின் இளமைக்கால கதாபாத்திரத்தில் அனிகா சுரேந்திரன், திரைப்படங்களில் நடித்த பருவத்தில் அஞ்சனா ஜெயபிரகாஷ், அரசியல் பருவத்தில் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். தர்புகா சிவா இசையமைத்திருந்தார். ஓடிடி-யில் வெளியான இந்த தொடரின் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 'குயின் 2' தொடரின் படப்பிடிப்பை படக்குழு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரம்யா கிருஷ்ணன், தனது சமூக வலைதளபக்கத்தில் 'குயின்' தொடரின் கெட்டப்புடன் படப்பிடிப்பில் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

gautham menon queen 2 queen ramya krishnan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe