சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'.இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர்ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வரும் 13 ஆம் தேதி(நாளை)திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'பீஸ்ட்' படத்திற்கு கத்தார் அரசாங்கம் தடை விதித்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தில்தீவிரவாதிகள் மற்றும் வன்முறை சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி கத்தார் அரசாங்கம் பீஸ்ட் படத்திற்கு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போன்ற காரணத்தை கூறி குவைத் அரசாங்கமும் பீஸ்ட்படத்தை வெளியிட தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு இதே போன்ற காரணத்தை கூறி விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'எஃப் ஐ ஆர்' படத்திற்கும், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'குரூப்' படத்திற்கும் குவைத் அரசாங்கம் தடை விதித்திருந்தது.