Advertisment

காதல் தேசத்தில் காதலை நிறைவு செய்த பிக்பாஸ் ஜோடி 

irumbu thirai.jpeg

ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ள படம் 'பியார் பிரேமா காதல்'. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைகிறார். காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் 'ஹய் ஆன் லவ்' என்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இதனுடன் படப்பிடிப்பு முடிந்த புகைப்படங்களையும் படக்குழுவினர் சமூக வலைத்தளங்களில் வெளியுட்டுள்ளனர்.

Advertisment

மேலும் படத்தின் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை குறித்து பேசும்போது... "இயக்குநர் இளன் என்னிடம் கதை சொல்லும் போதே, இந்த கதையின் இலக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் என்பதையும், ஒரு இசை அமைப்பாளராக என் பங்களிப்பை வழங்க பெரும் வாய்ப்பு இருப்பதையும் கணித்து கொண்டேன். ஹரிஷ் கல்யாண் இந்த படத்துக்குப் பிறகு மிக பெரிய அந்தஸ்துக்கு உயர்வார். ரைசா வில்சன் ரசிகர்களை நிச்சயம் கவர்வார். அவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரி தான் 'ஹய் ஆன் லவ்' (high on love) பாடல் குறுகிய காலத்தில் 84 லட்சம் பார்வையாளர்களை பெற காரணம். பாடல் காட்சிகளுக்காக இதுவரை படப்பிடிப்பு நடந்திராத இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் 'அசர்பேஜான்' என்ற நாட்டுக்கு சென்றோம். காதலுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கினால் அது 'அசர்பேஜான்' தான். காதல் தேசம் என்று அழைக்கலாம். அத்தனை அழகு. ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு காதல் படம் வரும், வந்து வெற்றி பெறும் என்பார்கள். இந்த யுகத்துக்கு "பியார் பிரேமா காதல்" என்று நான் உறுதியாக கூறுவேன்" என்றார்.

Advertisment
bigboss kamal kamalhassan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe