Pyaar Prema Kaadhal

பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு தயாரிப்பாளராக அறிமுகமானார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்திருந்த இப்படத்தை அறிமுக இயக்குனர் இளன் இயக்கியிருந்தார். இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.

Advertisment

இந்த நிலையில், இந்த வெற்றிக்கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. இளன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்து, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கவுள்ள இந்தப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தத் தகவலை யுவன்சங்கர் ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது.

Advertisment