Skip to main content

பிரபல நிறுவனம், திரையரங்கில் ஒத்திகை!

Published on 25/05/2020 | Edited on 25/05/2020

 

pvr


கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரைப்பட ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான ஷாப்பிங் மால் மற்றும் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. 
 


கரோனா பாதிப்பு இன்னும் குறையவே இல்லாத காரணத்தால் மீண்டும் பொழுதுபோக்கு இடங்களுக்கு மக்கள் திரும்புவார்களா, அரசு அனுமதி வழங்குமா என்ற சந்தேகத்தில் பலரும் உள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவின் பிரபல மல்டி ப்ளக்ஸ் நிறுவனமான பி.வி.ஆர். குழுமம், கரோனா தொற்று முடிவடைந்தவுடன் மக்களுக்குத் தொற்று பரவாமல் தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை ஒத்திகை செய்து பார்த்துள்ளது. அருகருகே அமராமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, ஒரு சீட்டிற்கு மற்றொரு சீட்டிற்கும் இடையில் நீளமான தடுப்பு வைக்கபட்டு பல முறைகளைச் செயல்படுத்தி ஒத்திகை பார்த்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலையாளப் படங்கள் திடீர் நிறுத்தம் - தொடரும் சிக்கல்! 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
malayalam cinema pvr issue

மலையாளத் திரையுலகில் இந்த ஆண்டு தொடர்ந்து பல படங்கள் அடுத்தடுத்து சாதனை படைத்து வருகிறது. மஞ்சும்மல் பாய்ஸ் முதன் முதலில் ரூ.200 கோடி வசூலித்த படமாக இருக்கிறது. ஆடுஜீவிதம் குறுகிய நாட்களில் ரூ.100 கிளப்பில் இணைந்தது. மேலும் பிரேமலு, பிரம்மயுகம் எனத் தொடர் வெற்றிப் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

இந்தச் சூழலில் அண்மையில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிர்வாகம் மலையாளப் படங்களை, திடீரென அவர்களது திரையரங்குகளில் திரையிடுவதை எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்தினர். இதற்கு காரணமாக திரையிடப்படும் விபிஎஃப் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் தங்களது திரையரங்குகளில் க்யூப், யுஎஃப்ஓ, உள்ளிட்ட சில ஃபார்மெட்களில் படங்களைத் திரையிடுவதற்கு விபிஎஃப் என்ற கட்டணத்தை தயாரிப்பாளர்களிடத்தில் வசூலித்து வந்தனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், மாற்றாக ‘பிடிசி’ எனப்படும் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் படங்களை திரையிட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் இந்த முடிவை எதிர்த்துதான் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிர்வாகம் மலையாளத் திரைப்படங்களை நிறுத்தியுள்ளார்கள்.  இதனால் இந்த விவகாரம் தற்போது மலையாளத் திரையுலகில் பெரிதாக பேசப்படுகிறது. திரைப்படங்கள் திரையிடப்படாததால் வசூலைப் பாதிப்பதாக தயாரிப்பாளர்கள் கூறிவருகின்றனர். அதனால் இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பேசி, பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தால் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆவேஷம், வருஷங்களுக்கு சேஷம், ஜெய் கணேஷ் ஆகிய மலையாளப் படங்கள் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

பீஸ்ட்- கே.ஜி.எஃப் 2 போட்டிக்கு இடையே சிம்பு படம் செய்த மேஜிக்!

Published on 16/04/2022 | Edited on 17/04/2022

 

SDR at PVR Theater between Beast-KGF2. Picture!

 

சென்னையில் உள்ள பிரபல மால்களில் ஒன்று சென்னை விஆர் மால். இந்த மாலில் அமைந்துள்ளது பிவிஆர். திரையரங்குகள். புதிதாக வெளியாகும் அனைத்து படங்களும் இந்த திரையரங்குகளில் ஒளிப்பரப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கே.ஜி.எஃப் சேப்டர்- 2 படம், ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளில் ஒளிபரப்பியது பிவிஆர் திரையரங்குகளின் நிர்வாகம். 

 

அதேபோல், விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படமும் தற்போது திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 14- ஆம் தேதி அன்று காதலர் தினத்தையொட்டி, நடிகர் சிம்பு நடிப்பில், கடந்த 2010- ஆம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தனது திரையரங்குகளில் உள்ள ஒரு திரையில் ஒளிபரப்ப தொடங்கியது பிவிஆர் நிர்வாகம். இப்படத்தை காண நாள்தோறும் பார்வையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

 

இப்படத்திற்கான டிக்கெட் பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேல் 'விண்ணை தாண்டி வருவாயா' திரைப்படத்தை பிவிஆர் நிர்வாகம் ஒளிபரப்பி வருகிறது. குறிப்பாக, சொல்ல வேண்டுமென்றால், பீஸ்ட், கே.ஜி.எஃப் சேப்டர் 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு மத்தியிலும் 'விண்ணை தாண்டி வருவாயா' படம் இரண்டு மாதங்களை கடந்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.