மீனம்பாக்கத்தில் சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் உள்ளது. இந்தியாவிலுள்ள சிறந்த விமான நிலையங்களில் இதுவும் ஒன்று. சர்வதேச விமான நிலையங்களில் உள்ளதுபோல் பல வசதிகளை இந்த விமான நிலையத்தில் அமைக்க எண்ணற்ற பணிகள் தற்போதும் நடந்துக்கொண்டிருக்கின்றன அந்த வகையில் இனி திரையரங்கு அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

Advertisment

chennai airport

இந்தியாவின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்கு நிறுவனங்களில் ஒன்றான பிவிஆர்தான் சென்னை விமான நிலையத்தில் ஐந்து திரையரங்குகளை அமைக்க இருக்கிறது. சமீபத்தில் சென்னையின் பிரபல சத்தியம் சினிமாஸ் நிறுவனத்தில் அதிக ஷேரை வாங்கியிருந்தது. சென்னையில் மட்டும் சுமார் 292 திரையரங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை விமான நிலையத்தில் தற்போது உருவாகிவரும் மல்டிலெவல் பார்க்கிங் கட்டிடத்தில்தான் ஒலிம்பியா நிறுவனம் சகலவசதிகள் கொண்ட ஒரு மால் போன்ற அங்காடியை கட்ட இருக்கிறது. அதில் அவர்களுடன் இணைந்து பிவிஆர் நிறுவனம் திரையரங்குகளை துவங்க இருக்கிறது. 2021ஆம் ஆண்டு பாதியில் இந்த திரையரங்குகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் 20 சதவீதம் பேரும் நகரத்தில் இருக்கும் 80 சதவீதம் பேரும் இந்த திரையரங்கின் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.