துணிவாக துணிவு வெளியீட்டு தேதியை அறிவித்த பிவிஆர் சினிமாஸ் 

PVR Cinemas Announced Thunivu Release

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் 'துணிவு'. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் 'சில்லா சில்லா', 'காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அதைத் தொடர்ந்து, 'துணிவு' படத்தின் கதாபாத்திரங்களின்பெயர் மற்றும் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இப்படத்தில் பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம் - மை பா, பிரேம் - பிரேம், பகவதி பெருமாள் - ராஜேஷ், ஜான் கொக்கேன் - க்ரிஷ், வீரா - ராதா, ஜிஎம் சுந்தர் - முத்தழகன், அஜய் - ராமச்சந்திரன், சமுத்திரக்கனி - தயாளன் ஆகிய கதாபாத்திரப் பெயர்களில் நடித்துள்ளனர். மேலும், மஞ்சு வாரியர் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பி.வி.ஆர் சினிமா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘துணிவு ட்ரைலர் வெளியாகிவிட்டது. ட்ரைலர் பற்றிய உங்கள் கருத்துக்களைத்தெரிவியுங்கள்’ என்றதோடு, ‘பி.வி.ஆர் திரையரங்குகளில் ஜனவரி11 முதல் வருகிறது’ என்று துணிவு வெளியீட்டுத்தேதியைக் குறிப்பிட்டுள்ளது. இன்னும் படக்குழுவேவெளியீட்டுத்தேதியை அறிவிக்காத நிலையில், திரையரங்கத்தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும், வெளியாகும் தேதி உறுதிதானா? என்றசந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

துணிவு படம்சென்சாரில்யு/ஏ சான்றிதழ் வாங்கியுள்ளதும், 2 மணிநேரம் 23 நிமிடங்கள் படத்தின் கால அளவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

ACTOR AJITHKUMAR Thunivu
இதையும் படியுங்கள்
Subscribe