Advertisment

உதவி இயக்குநர்களை சர்ப்ரைஸ் செய்த பி. வாசு

p.vasu gifted laptop to his assistant directors

திரைத்துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மொத்தம் 64 படங்களை இயக்கி பிரபல இயக்குநராக வலம் வருபவர் பி. வாசு. தனது 65வது படமாக சந்திரமுகி2 படத்தை இயக்கி முடித்துள்ளார். வருகிற 28 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா தயாரித்துள்ளது. கீரவாணி இசையமைத்துள்ளார்.

Advertisment

இதனிடையே நேற்று தனது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியுள்ளார் வாசு. அதில் ராகவா லாரன்ஸ், லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தலைவர் தமிழ்குமரன் உள்ளிட்ட சந்திரமுகி படக்குழுவினர் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்த நிகழ்வில் தனது உதவி இயக்குநர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் பி. வாசு. அவர்களுக்கு லேப்டாப் ஒன்றை பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளார்.

Advertisment

p.vasu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe