Skip to main content

பி.வி. சிந்து ரஜினியுடன் நேரில் திடீர் சந்திப்பு!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தார்பார் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து, ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.  தர்பார் ஷூட்டிங் முடிவடைந்தவுடனே ரஜினிகாந்த் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 

pv sindhu

 

 

விஸ்வாசம் படத்தை அடுத்து சூர்யாவை வைத்து இயக்குனர் சிவா படம் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாக ரஜினிகாந்த் படத்தை எடுக்கிறார். ரஜினியின் 168வது படமாக உருவாகும் இதில் டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

டிசம்பர் 11ஆம் தேதி தலைவர் 168 படத்திற்கான பூஜை போடப்பட்டது. இணையத்தில் அந்த புகைப்படமும் வெளியாகி வைரலானது. இந்நிலையில் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தலைவர் 168 படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் தங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காமன்வெல்த் போட்டி: பேட்மிண்டனில் ஒரேநாளில் மூன்று தங்கம் வென்று இந்திய வீரர்கள் அசத்தல்! 

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

Commonwealth Games: Indian players won three golds in one day in Badminton!

 

காமன்வெல்த் விளையாட்டின் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21- 15, 21- 13 ஆகிய நேர் செட்களில் வென்றார். காமன்வெல்த் போட்டியின் தனிப்பிரிவில் முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்று பி.வி.சிந்து அசத்தியுள்ளார். 

 

அதேபோல், காமன்வெல்த் பேட்மிண்டன் ஆடவர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் மலேசியாவின் சீ யாங்கை 19- 21, 21- 9, 21- 16என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

 

இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் சிராக் ஷெட்டி, சாய்ராஜ் சாத்விக் இந்திய இணை, இங்கிலாந்தின் பென், ஷான் இணையை வீழ்த்தி தங்கம் வென்றது. காமன்வெல்த் பேட்மிண்டனில் ஒரே நாளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். 

Commonwealth Games: Indian players won three golds in one day in Badminton!

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சரத் கமல், இங்கிலாந்தின் லியாம் பிட்ச்ஃபோர்டை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். 

 

22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

 

Next Story

காமன்வெல்த் போட்டிகள்: தங்கம் வென்றார் பி.வி.சிந்து 

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

PV Sindhu

 

காமன்வெல்த் பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்றார்.

 

22ஆவது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் இந்தியா இதுவரை 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்கள் வென்றுள்ளது. 

 

இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பி.வி. சிந்து தங்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனையை 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் இந்தத் தொடரில் இந்தியா வென்ற தங்கப் பதக்கத்தின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.