Advertisment

ஜி.வி பிரகாஷ் குரலில் கவனம் ஈர்க்கும் 'புத்தம் புது காலை விடியாதா' பாடல் 

Putham Pudhu Kaalai Vidiyaadhaa song goes viral

தமிழ் சினிமாவில் அந்தாலஜி திரைப்படங்களுக்கான வரவேற்பு அதிகமாகிவருகிறது. சமீபத்தில் வெளியான 'பாவக்கதைகள்', 'நவரசா' உள்ளிட்ட அந்தாலஜி திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் தற்போது ஐந்துகதைகள் கொண்ட 'புத்தம் புது காலைவிடியாதா'என்ற அந்தாலஜி திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குநர்கள் பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் அந்தோணி மற்றும் சூர்யா கிருஷ்ணாஆகியோர் இயக்கும் இப்படத்தில்ஐஸ்வர்யா லக்ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலீப் சுப்பராயன், கௌரி ஜி. கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந் மற்றும் டீஜே அருணாசலம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisment

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்'புத்தம் புது காலை விடியாதா' படத்தின் 5 பாடல்கள் அடங்கிய ஆல்பத்தை வார்னர் மியூசிக் இந்தியா நிறுவனம் அமேசான் ப்ரைமுடன் இணைந்து வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி பாடகர்கள் பாடலைபாடியுள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இப்படத்தின் தலைப்பு பாடலை இசையமைத்து பாடியுள்ளார். தற்போது அந்த பாடல் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

Advertisment

Putham Pudhu Kaalai Vidiyaadhaa GV prakash
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe