Advertisment

வீடு கட்ட விஜய் பணம் கொடுத்தாரா? - புஸ்ஸி ஆனந்த் பதில்!

 Pussy anand answer the question about vijay free home

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடக்கும் விலையில்லா வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் சிலரைத்தேர்வு செய்து தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது அக்கட்சியினர் வீடு கட்டி தந்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் தா.வெ.க. சார்பில் விலையில்லா வீடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற அந்நிகழ்வில் 2 குடும்பங்களுக்கு இலவசமாக வீடு வழங்கினர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த புஸ்ஸி ஆனந்த் “திருவள்ளூவர் மாவட்டத்தில் ஏற்கெனவே பத்து வீடு கட்டிக் கொடுத்துள்ளோம். தொடர்ந்து இதுபோல படிப்படியாக அந்தந்த மாவட்டத்திலுள்ள ஏழை மக்களுக்கு அந்த மாவட்டத்தில் இருக்கும் த.வெ.க நிர்வாகிகளே செய்து கொடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.

Advertisment

அப்போது செய்தியாளர்கள் அவரிடம் “நீங்க விஜய்யின் ரசிகர்களிடம் காசு வாங்கி வீடு கட்டி தருவதற்கு ஏன் விஜய் பெயரை வைத்துள்ளீர்கள்” எனக் கேள்வி எழுப்பியதற்கு “வீடு கட்டிகொடுத்துளோம் என்று தான் சொல்லியுள்ளோம். விஜய் கொடுத்தாரா? அல்லது ரசிகர்கள் தான் செய்தார்களா? என்பதை நாங்கள் சொல்லவில்லை. தளபதி விலையில்லா வீடு திட்டத்தின் கீழ் தான் நாங்கள் இதைச் செய்துள்ளோம். இந்தத்திட்டத்திற்கு விஜய் பணம் கொடுத்தரா? இல்லையா? என்பது உங்களுக்குத் தெரியுமா?” எனப் புஸ்ஸி ஆனந்த் பதிலளித்தார். அதற்கு அவரின் அருகில் இருந்த த.வெ.க நிர்வாகிகள் ஆவேசமாக கத்திகொண்டு செய்தியாளர்கள் சந்திப்பை கடந்து சென்றனர்.

Bussy Anand tamizhaga vetri kazhagam actor vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe