Advertisment

நடிக்க வேண்டாமென முடிவெடுக்க காரணம் - புஷ்பவனம் குப்புசாமி பதில் 

 Pushpavanam Kuppusamy Interview

Advertisment

நாட்டுப்புறப் பாடல்களின் மூலம் தமிழ் இசையுலகில் வெற்றிகரமாககோலோச்சி வரும் தம்பதி புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி இருவரையும் நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம்.

புஷ்பவனம் குப்புசாமி பேசியதாவது “இரட்டை அர்த்தம் உள்ள பாடல்கள் தற்போது அதிகம் வருகின்றன. அதனால் நானாகவே திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடுவதைக் குறைத்துக் கொண்டேன். என்னைப் போன்று சினிமாவுக்கு நடிக்கச் சென்ற பலர் அதன் பிறகு சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டனர். சினிமாவில் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது. நான் நடித்த படம் வெளிவந்த நேரத்தில் ரசிகர்கள் என்னிடம் "இந்த கேரக்டரில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் நீங்கள் பாடியது போல் பாடல்களை யாராலும் பாட முடியாது" என்றனர்.அப்போது தான் இனி நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன்."

தன்னுடைய வாழ்விணையரை குறித்து பேசுகையில்“யாரையும் புண்படுத்த மாட்டார். எப்போதும் பொய் சொல்ல மாட்டார். ஒருமுறை ஜெயலலிதா அம்மாவை பார்க்கச் சென்றபோது அவரிடம் எங்களுடைய பெண்ணுக்கு மெடிக்கல் சீட் கேட்குமாறு அவருடைய உதவியாளரே அறிவுரை சொன்னார். ஆனால் அம்மாவிடம் இவர் எதுவும் கேட்கவில்லை. அவர் போன்று தொடர்ந்து உழைக்கும் பெண்ணை நான் பார்த்ததே இல்லை. ஓய்வே எடுக்க மாட்டார். கடினமான உழைப்பாளி.” என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார்.

interview N Studio pushpavanam kuppusamy
இதையும் படியுங்கள்
Subscribe