Advertisment

புஷ்பா படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தாதாசாகேப் பால்கே விருது கமிட்டி 

Pushpa won Best Film Award Dadasaheb Phalke Film Festival

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'புஷ்பா' திரைப்படம் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் மிகப்பெரும் தொகையை வசூல் செய்து வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

Advertisment

இந்த நிலையில், தாதாசாகேப் பால்கே விருது-2022 இன் சிறந்த படமாக புஷ்பா திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்த தாதாசாகேப் பால்கே விருது கமிட்டி, புஷ்பா படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது. தாதாசாகேப் பால்கே விருது குழுவின் இந்த அறிவிப்பு புஷ்பா படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாம். அதே நேரத்தில், தாதா சாகேப் பால்கே விருது-2022இன் சிறந்த படத்திற்கான விருது புஷ்பா படத்திற்கு வழங்கப்பட்டதுரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Advertisment

pushpa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe