Skip to main content

'புஷ்பான்னா ஃப்ளவருன்னு நெனச்சீங்களா, ஃபயர்ரு’.... ரசிகர்களை மிரட்டும் அல்லு அர்ஜுன்

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

pushpa movie trailer released

 

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 'புஷ்பா' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது 

 

ad

 

இந்நிலையில், படத்தின் ட்ரைலரைப் படக்குழு நேற்று (06.12.2021) வெளியிட்டுள்ளது. சந்தன மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மிரட்டியுள்ளார். நேற்று வெளியான ‘புஷ்பா’ படத்தின் ட்ரைலர் யூடியூப் தளத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காளி கெட்டப்பில் மிரட்டும் அல்லு அர்ஜுன்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
allu arjun pushpa 2 teaser released

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், 'புஷ்பா’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்த நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதை முடித்துவிட்டு அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காண்கிறார் அல்லு அர்ஜுன். அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்பட பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புஷ்பா 2 படக்குழு அல்லு அர்ஜுனுக்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. டீசரில் அல்லு அர்ஜுன், காளி கெட்டப்பில் திருவிழாவில் எதிரிகளை மிரட்டி சண்டை போடும் காட்சி இடம்பெறுகிறது.

‘புஷ்பா தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய சுகுமாரே இயக்கி வருகிறார். ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக், கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்போது ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்ற அதே காளி கெட்டப்பில் படத்தின் டீசரிலும் அல்லு அர்ஜுன் தோன்றுகிறார். 

Next Story

அல்லு அர்ஜுனுக்கு ஜோடி - இரண்டு ஹீரோயின்களிடம் அட்லீ பேச்சு வார்த்தை

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
trisha or samantha to pair in atlee next allu arjun movie

ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி அவரும் முன்னணி இயக்குநராக உருவானார். இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியான இப்படம் உலகம் முழுவதும் 1143.59 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்தை முடித்துவிட்டு விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க கதையும் எழுதி வருவதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது அது உறுதியாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

trisha or samantha to pair in atlee next allu arjun movie

இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் இந்தாண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக சொல்லப்பட்டு வருவதையடுத்து தற்போது ஹீரோயின் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷா மற்றும் சமந்தா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லு அர்ஜுன் பிறந்தநாளான வருகிற 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாக டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. த்ரிஷா தற்போது விடாமுயற்சி, தக் லைஃப், மலையாளத்தில் ஐடென்டிட்டி, ராம் மற்றும் தெலுங்கில் விஷ்வம்பரா படத்தை கைவசம் வைத்துள்ளார். சமந்தா சிட்டாடெல் நெப் தொடரை வைத்துள்ளார்.

அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் வருகிற 8ஆம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாள் விருந்தாக வெளியாகிறது.